செய்திகள்

செயலாளரின் நடவடிக்கைக்கு எதிராக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

தமது பாடசாலை உடற்கல்வி ஆசிரியரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யக் கோரி இரண்டாவது நாளாகவும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு ஒவ்வாத சீருடை அணிந்து வருவது தொடர்பாக நடவடிக்கை எடுத்த ஒழுக்காற்று ஆசிரியர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனது சீருடை தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்தமையால் தமது ஒழுக்காற்றுக்கு பொறுப்பான உடற்கல்வி ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மாணவர்கள் இவ் இடமாற்றத்தை நிறுத்தக் கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதுவரை எந்த அதிகாரிகளும் சாதமான பதிலை வழங்காமையால் இரண்டாம் நாளாகவும் தாம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

IMG_3449 IMG_3429

N5