வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமையை உறுதிப்படுத்தும் செயலமர்வு
நீண்டகால அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களது உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு நேற்று செவ்வாய்கிழமை வவுனியா பிராந்திய சுகாதார பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பெண்கள் விவகார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீண்டகால அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப்படுத்தவது தொடர்பிலான செயலமர்வு வடமாகாணம் முழுவதும் இடம்பெறவுள்ளது. அதன் முதல் கட்டமாக வவுனியாவில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வழங்கினர்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த செயலமர்வின் மூலம் மாகாண மட்ட செயலமர்வுடன் கொள்கை ஆவணமாக வடக்கு மாகாண சுகாதார, பெண்கள் விவகார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.திருவாகரன், உதவிச்செயலாளர் திருமதி சுஜீவா, சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
N5




