செய்திகள்

வடமாகாண முதலமைச்சரினால் மக்களுக்கான வீடுகள் கையளிப்பு

யாழ். கைதடி மத்தி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சருடைய 2016ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு நிதியின் மூலம் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.

2016ம் ஆண்டுக்கான வீடமைப்பு நிதி ஊடாக மாகாணத்தில் 17 வீடுகள் முதலமைச்சரினால் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5