வடமாகாண முதலமைச்சரிற்கும் ஆளுநரிற்கும் இடையில் முறுகலை ஏற்படுத்துமா யாழ் சர்வதே மாநாடு ?
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேமுதலீடு தொடர்பான மாநாடு காரணமாக வடமாகணத்தின் ஆளுநரிற்கும் முதலமைச்சரிற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திவெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கையின்வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரோ யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ம் திகதி சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.இதற்காக யாழ்ப்பாணம் செயலகத்தில் அலுவலகமொன்றையும் அமைக்கவுள்ளார்.
எனினும் இந்தநடவடிக்கை ஆளுநரிற்கும் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனிற்கும் இடையில் சர்ச்சையை தோற்றுவிக்கலாம் என தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள் தன்னிச்சையாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் ஆளுநர் முதலமைச்சரின் அதிகாரவரம்பிற்குள் ஊடுவுகின்றார் எனவும் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தான் இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசாங்கம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபையை மீறி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக முதலமைச்சர் கருத்து தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.மத்திய அரசாங்கமும் அதன் பிரதிநிதியான ஆளுநரும் செயற்பட்டுவரும் விதம் காரணமாக 13வது திருத்தம் மூலம் மாகாணசபைகளிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துவருகின்றார்.
இதேவேளை வடமாகாணமுதலமைச்சர் அந்தபகுதியை அபிவிருத்திசெய்வதற்கு சிறியநடவடிக்கையை கூடமுன்னெடுக்கவில்லை,அரசாங்கம் வழங்கியநிதியைகூட பயன்படுத்தாமல் திருப்பியனுப்பிவிட்டார் என்ற நியாயமான மனக்குறை மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
அதேவேளை மத்திய அரசாங்கமும் வடமாகாணசபை மற்றும் அதன் முதலமைச்சருடனான செயற்பாடுகளில் சரியான விதத்தில் நடந்துகொள்ளவில்லை.உள்ளுரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைத்துவம் மற்றும் ஸ்தாபனங்களை கலந்தாலோசனை செய்வது, அவர்களை உள்வாங்குவது குறித்து மத்திய அக்கறையை காண்பிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்யவிரும்புவபுர்களை கையாள்வதற்கான அலுவலகம் யாழ் செயலகத்தில் அமையவுள்ளது.மாகாண அலுவலங்கள் மத்தியஅரசாங்கத்தின் கீழ் வருவதனால் மத்தியின் பிரதிநிதி என்ற வகையில் அவர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.மாகாணசபை இந்த அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது.எனினும் முதலமைச்சரின் அனுமதியின்றி மாகாண அலுவலகங்களையும், அலுவலகர்களையும் பயன்படுத்துவதை அரசியல்ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை, நல்லிணக்கம் மற்றும் அதிகாரபகிர்விற்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழலாம்.
வடமாகாணமுதலமைச்சரின் நிலைப்பாடுகள் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளின்பேரிலேயே ஆளுநர் இந்த மாநாட்டைநடத்துகின்றார் என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.வடமாகாணத்தில் முதலமைச்சர் மற்றும் வடமாகாணசபையை புறந்தள்ளிவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்கமும் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இது அமையலாம்,இதன் மூலம் மத்திய அரசாங்கம் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்தேசியவாதிகளிடமிருந்து மக்களை தனிமைப்படுத்த திட்டமிட்டிருக்கலாம்.
அபிவிருத்தியை மையப்படுத்திய நடவடிக்கைகள் வடக்கில் தேசிய கட்சிகளிற்கான ஆதரவை அதிகரிக்கலாம் என மத்திய அரசாங்கம் மதிப்பிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




