செய்திகள்

வட மாகாணசபை உறுப்பினர்களை அவசரமாக சந்தித்தார் சம்பந்தன்

வட மாகாணசபை உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள், அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இடம்பெற்றுவரும் நகர்வுகள் மற்றும் வட மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் உறுப்பினர்களுடைய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

n10