வட மாகாண ஆளுநராக மீண்டும் பி.எம்.எஸ். சார்ள்ஸ்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் நாளை புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரி அரச அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், சுங்க திணைக்கள பணிப்பாளர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)




