செய்திகள்

வட மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் : ஹெல உறுமய

வட மாகாண சபை எல்லை மீறி தொடர்ந்தம் செயற்படுமாகவிருந்தால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையெடுப்போம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் தவிசாளர் கடிகல்லே விமலசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை அதிகார வரம்பை மீறி செல்கிறது. தொடர்ந்தும் இவ்வாறு செல்லவிடாது அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)