செய்திகள்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் முழு விபரம்

 

வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில், இன்று ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், இன்று, வட மாகாண சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, வட மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர், இந்த தீர்வுத்திட்ட யோசனையை ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.

அதன் முழு விபரங்களை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

https://www.scribd.com/doc/313660686/Couctitution-Tamil

n10