செய்திகள்

வட மாகாண முதலமைச்சரின் பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழினத்தின் ஒளி நீயே  வாழ்க!
 திக்கற்ற பெருவெளியில்
நிர்க்கதியாய் ” தமிழினம்’
நின்றவேளை
சிறகுகள் விரித்து
தாய்ப் பறவை போலவே
அடைக்கலம் தந்த ” தலைவா’
 அழிவுகள் பல
அணிதிரண்டு வந்தபோதும்
அகிலமே எதிர்த்து
சதிபல புரிந்தபோதும்
சோரம் போகா
எம் இனத்தை
கூறுகள் செய்தே
விற்றுப் பிழைத்திட
 ஒற்றுமையின் பெயரால்
நாடகமாடித் தலைமைகள்
நின்றவேளை
விலைபோகா தலைவனாய்
விடயமறிந்திடு வித்தகனாய்
அஞ்சா நெஞ்சுடை தீரனாய்
தலைமை தந்த ” முதல்வா’
புரளி பேசுவோர் பலருளர்
புரியாதோரும்
புரியாததாய் நடிப்போரும்
இன்னுமுளர்
 தடைகள் தகர்த்திடு ” தலைவா ‘
தமிழினத்தின்
நம்பிக்கை ஒளி நீ
துயர்கள் துடைத்திடு ” முதல்வா’
தமிழினத்தின்
ஆபத்பாந்தவன் நீ
வாழ்க
பல்லாண்டு வாழ்க
தமிழர் வாழ வாழ்க !
க. வசந்தராஜா
 மாவிட்டபுரம்
N5