செய்திகள்

வத்தளை தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் ஜோன் அமரதுங்கவினால் நாட்டப்பட்டது : பிரதேசவாசிகள் எதிர்ப்பு நடவடிக்கையில்

வத்தளை ஒலியமுல்லை பகுதியில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நேற்று அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் வைக்கப்பட்ட நிலையில் அந்தப் பாடசாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் அங்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலையேற்பட்டதுடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே அந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த இடம் பிரதேசத்திற்கான மைதானம் அமைப்பதற்கான காணியெனவும் இதில் பாடசாலையை அமைக்க இடமளிக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அடிக்கலை நாட்ட அமைச்சர் குறித்த இடத்தில் பாடசாலையை அமைத்தே தீருவோம் என சபதமிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.  -(3)