வரட்சியால் 7 மாவட்டங்களில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான கால நிலையால் 208,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோணமலை , மட்டக்களப்பு , பொலனறுவை , வவுனியா , குருநாகல் , கிளிநொச்சி மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலனறுவை மாவட்டத்தில் 23,187 குடும்பங்களை சேர்ந்த 110,352 பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 16,591 குடும்பங்களை சேர்ந்த 57,001 பேரும் ,திருகோணமலை மாவட்டத்தில் 3,867 குடும்பங்களை சேர்ந்த 12,677 பேரும் , குருநாகல் மாவட்டத்தில் 2,617 குடும்பங்களை சேர்ந்த 8,422 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 1516 குடும்பங்களை சேர்ந்த 5,550 பேரும் , வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களை சேர்ந்த 3111 பேரும் , இரத்தினப்புரி மாவட்டத்தில் 2,845 குடும்பங்களை சேர்ந்த 10,994 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. -(3)




