வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்றது – அலையென திரண்ட பக்தர்கள்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வெகு விமர்சையாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கந்தப்பெருமான் சித்திர தேரிலே பவனி வருகின்ற காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்த மண்டவத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான் காட்சியானது அவர் பக்தர்களை பரவசப்படுத்தியிருந்தது.
மேலும் நாளைய தினம் தீர்த்தத்திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது. இதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்து கொள்ளுமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.(15)




