செய்திகள்

வரவு செலவின் பின்னர் அரசாங்கம் கவிழும் : அடித்துக் கூறும் நாமல்

வரவு செலவு திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கவிழுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறை கிடையாது. சாலாவ வெடிப்பு , கொழும்பு வெள்ளம் , மலையக மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு மாதங்கள் பல முடிந்துவிட்டன. ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. இப்போது மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வந்துள்ளனர். எப்படியும் இந்த அரசாங்கம் நிச்சயமாக கவிழும். வரவு செலவு திட்டத்தின் பின்னர் நடப்பதை பார்க்கலாம்.என அவர் தெரிவித்துள்ளார்.