வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலையுமா?
வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்பதே ஆளும்கட்சியின் நிலைப்பாடாகும்.
அதன் பின்னர் கூட்டு அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டு அந்த கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதியிடம் சென்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, இன்று திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு என்பன மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




