வரவு செலவு திட்டத்தில் எமது யோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் : இல்லையேல் எதிர்ப்போம் சு.க அறிவிப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் 2017 வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால் அதற்கு தாம் ஆதரவளிக்க மாட்டோம் என அந்தக் கட்சியின் பேச்சாளரான் இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளோம் என்பதற்காக எல்லா நடவடிக்கைகளுக்கும் தமக்கு ஆதரவளிக்க முடியாது எனவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் எமது யோசனைகளையும் உள்ளடக்கியவற்றையே நாம் ஆதரிப்போம். இதன்படி அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் எமது யோசனை உள்ளடக்கப்படாவிட்டால் அதனை நாம் ஆதரிக்கப் போவதில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




