வருண் மணியனா.. வேண்டவே வேண்டாம்: அலறும் த்ரிஷா
வருண் மணியன் தொடர்பான எந்தப் படமாக இருந்தாலும் சரி. அதில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
ஏற்கனவே, வருண் மணியன் தயாரிப்பில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டது நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே, அந்த படத்தில் எந்த விதத்திலும் வருண் மணியனுக்கு சம்பந்தமே இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் த்ரிஷா நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.
அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த ஒரு படத்துக்கு வருண் மணியன் நிதியுதவி செய்வதைக் கேள்விப்பட்ட த்ரிஷா, அதிரடியாக அதில் இருந்து விலகியுள்ளார்.




