செய்திகள்

வறட்சியால் நீர் மின் உற்பத்தி நெருக்கடியில் : மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நடவடிக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வரும் நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் தடங்கல் இன்றி மின்விநியோகம் இடம்பெறுமென அமைச்சு அறிவித்துள்ளது. -(3)