வறட்சியால் நீர் விநியோகம் 18 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுகிறது
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் குழாய் நீர் விநியோக நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர் விநியோக நடவடிக்கைகளை 18 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
வழமையாக 24 மணி நேரமும் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தற்போதைய நிலைமையில் நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் 18 மணித்தியாலங்களுக்கு அதனை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அந்த சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)




