செய்திகள்
வற் வரி அதிகரிப்பில் குறைப்பாடுகள் உள்ளன : ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
வற் வரி அதிகரிப்பு தொடர்பாக வர்த்தக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்குமிடையே நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் நாடு பூராகவுமுள்ள வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது வரி அதிகரிப்பால் தமது வர்த்தக துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக வர்த்தக சங்கத்தினர் எடுத்துக் கூறியதுடன் ஜனாதிபதியும் அதில் குறைப்பாடுகள் இருக்கின்றதென்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாக அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




