வற் வரி அதிகரிப்புக்குள் உள்ளாகும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்கள்
2016ம் ஆண்டு வரவு செலவுதிட்ட முன்மொழிவுக்கமைவாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை துணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக 2002ம் ஆண்டு இலக்கம் 16க்கு உட்பட்ட வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச்சட்டத்தின் கீழ் பெறுமதிசேர்க்கப்பட்ட வரி தொடர்பிலான ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. வற்வரி திருத்தத்திற்கு அமைவாக முதலில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த திருத்தச் சட்டமூலத்திற்கு பதிலாக கீழே குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை உள்ளடக்கி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெறுமதிசேர்க்கப்பட்ட வற்வரியை 15 சதவீதமாக முன்னெடுத்தல் , வருடாந்தம் மொத்த விற்பனை வரி 50 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை மற்றும் சில்லறை வர்த்தகம். , நோய் பரிசோதனை உள்ளிட்ட வைத்திய ஆலோசனை உள்ளடக்கப்படாத வெளி நோயாளர்கள் சேவைகள் தவிர ஏனை தனியார் சேவை. , தொலைத்தொடர்பு சேவை , புகையிலை மூலமான பொருட்கள் , சீனி அல்லது ஏனைய இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்ட பால்மா
இலங்கை விமான நிலையத்திலிருந்து இலங்கையிலிருந்து வெளியேறும் வெளியிலுள்ள விமான நிலையத்திற்கு செல்லும் விமானப்பயணிகளுக்கான அனுமதிக்கட்டணம் , 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி திட்டம் அல்லது 2016-10-01 தினத்திற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்குட்பட்ட அல்லது அன்றைய தினம் பூர்த்தி செய்யப்படட திட்டங்கள் தவிர திட்ட முதலீடு 5மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தங்குமிட வசதிகளை வழங்குதல் , குத்தகைக்கு விடுதல் வாடகைக்கு வழங்குதல் முதலான சேவைகளுக்கான தற்பொழுது உள்ள வற்வரியிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. , இலங்கை முதலீட்டு சபையினால் தேசிய வர்த்தக சந்தைக்கு விநியோகிக்கப்படும் ஆடைத்தொழிற்துறை தயாரிப்பான ஒரு துண்டுக்கு அடிப்படையில் அறவிடப்படும் வரி 75 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.
இது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




