செய்திகள்

வற் (வரி) அதிகரிப்பு அமுலுக்கு வந்தது

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) திருத்தச் சட்டமூலம் 53 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வாக்களிப்பின் போது ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின்போது சபையில் இருக்கவில்லை
இதன்படி வற் திருத்தச் சட்டமூலம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது இதற்கமைவாக இதுவரை அறவிடப்பட்ட 11% வெற்வரி 15% வரை அதிகரிப்பட்டுள்ளது.
இருப்பினும் 74 அத்தியாவசியப் பொருட்கள் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)