வற் (வரி) திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
அரசாங்கத்தின் வற் (வரி) திருத்தம் தொடர்பான புதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நேற்று சபையில் பிரதி சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்றைய தினம் குறித்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் வற் வரி 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே மே மாதம் முதல் 15 வீத வற் வரியை அரசாங்கம் அறவிட்ட போதும் அது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது இருந்தமையினால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்திருந்தது. இதனை தொடர்ந்து சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்ட போதும் அது அரசியலமைப்புக்கு முரண் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் புதிய சட்டமூலத்தை தயாரித்து அதனை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




