செய்திகள்

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைக்கு எதிராக பறக்கும் கறுப்புக்கொடிகள்!

ஐ.நா கடும் நிபந்தனையுடன் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (12.3) காணாமல் போனோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட கொட்டகைக்கு முன்பாகவும், வீதியின் இரு மருங்கிலும் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்றையதினம் (11) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது. அதில் ஐ.நா கடும் நிபந்தனையுடன் தீர்மானத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் கால அவகாசம் வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத் தீர்மானத்தை பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் தாம் எதிர்ப்பதாகவும் தமக்கு இதில் உடன்பாடில்லை என எதிர்ப்பு தெரிவித்தே இவ் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.\

DSC_0002 (1) DSC_0015 (1)

N5