வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் கருத்தறியும் நிகழ்வு
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் மக்கள் கருத்தறியும் பொதுக்கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக உறுப்பினர் வி.தேவராசா தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இட்ம்பெற்றது.
இதில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நிபுணர் குழுவைச் சேர்ந்த சட்டத்தரணிகளான புவிதரன், காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் மற்றும் அதன் தீர்வுத்திட்ட வரைவு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன் மக்கள் கருத்தும் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜ், ம.தியாகராசா, இ.இந்திரராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செ.கஜேந்திரன், சிறிரொலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
N5







