செய்திகள்

வவுனியாவில் பட்டப்பகலில் மோட்டர் சைக்கிள் திருட்டு: சீசீடிவி கமராவில் சிக்கிய திருடன்

வவுனியாவில் பட்டப்பகலில் மோட்டர் சைக்கிள் திருடியவர் சீசீடிவி கமெரா காணொளியில் சிக்கியுள்ளார்.

புதன்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளை கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்று பொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் அமர்ந்து இருந்து விட்டு அதனை திருடிச் சென்றுள்ளார்.

இத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமரா வீடியோவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

N5643

2

01