செய்திகள்

வவுனியாவில் வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்ற மேற்கொண்டனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக காணொளி காண்பிக்கப்பட்டதோடு, எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும், விபத்துக்களில் இருந்து எங்களை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு அறிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வவுனியா புகையிரத வீதியில் மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்து நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது. குறிப்பாக பாதசாரிகள் வீதியில் எவ்வாறு நடந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டுனர்கள்- துவிச்சக்கர வண்டி- முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் எவ்வாறு பயணிக்க வேண்டும் மற்றும் வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கு வீதி நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது.

இதன் போது பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், போக்குவரத்து பொலிசார், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

DSC05543

IMG_0028 IMG_0016

DSC05566 DSC05539

N5