செய்திகள்

வவுனியா ஓமந்தை விபத்தில் பெண் ஒருவர் பலி: இரு சிறுவர்கள் படுகாயம்!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று (09) காலை 6.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

IMG_0186aகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அண்மித்ததாக பயணித்துக் கொண்டிருந்த போது பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

IMG_0176aஇவ்விபத்தில் அவ் முச்சக்கர வண்டியில் பயணித்த கொழும்பு மோதரையைச் சேர்ந்த கந்தையா மாரியாயி (வயது 56) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரின் மகளின் பிள்ளைகளான டிலானி (2 வயது), டெனுசன் (7 வயது) ஆகிய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி காயம் எதுவும் இன்றி தப்பியுள்ளதுடன், காயமடைந்த இரு சிறுவர்களின் தாயும் சிறு காயத்துடன் தப்பியுள்ளனர்.

01-1 (2)மரணமடைந்தவரின் மகனான சாரதியின் நித்திரைத் தூக்கத்தினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

N5