வவுனியா காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
வவுனியா, பிரமனாளங்குளம் காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, பிரமனாளங்குளம் காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக வவுனியா விமானப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தோடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர் குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள்- 41, கைக்குண்டு – 02, மோட்டர் குண்டு – 01 என்பவற்றை மீட்டுள்ளனர்.

இது யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
N5




