வவுனியா கோர விபத்தில் யாழ் நோக்கிச் சென்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரே பலி (இணைப்பு- 2) வீடியோ
வவுனியா, ஈரப்பெரியகுளத்திற்கு அண்மித்த நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பிக்கப் ரக வாகனமும், யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹென்ரேனர் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
புத்தளத்தில் வைத்தியராக பணியாற்றும் சிங்கள பெண் வைத்தியரான ரி.எம்.ஏ. சுதேசிகா என்பரும் அவரது கணவரான முகமது சபுர் மற்றும் மாமாவான வவுனியாவில் பிரபல வர்த்தகரான சப்ரின் மற்றும் அவரது மனைவி மலீனா ஆகியோர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியர் மற்றும் அவரது 58 வயதுடடைய கணவரின் தந்தையான சப்ரின் 53 வயதுடைய கணவரின் தாயார் மலீனா சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். வைத்தியரின் கணவர் முகமது சபுர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
N5




