செய்திகள்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய விவகாரம் பூதாகாரமாவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளரே காரணம்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய விவகாரம் பூதாகாரமாவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளரே காரணம்  என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 3400ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 179 ஆசிரியர்கள் கடமையில் உள்ளனர். அதிபர் தவிர்ந்த 9 பிரதி அதிபர்கள்இ உதவி அதிபர்கள் கடமையில் உள்ளனர். இதைவிட 7 உடற்கல்வி ஆசிரியர்கள கடமையில் உள்ளனர். இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாகவென்று மாகாணப் பாடசாலை சார்ந்த ஆசிரியர் ஒருவர் இப்பாடசாலைக்கு இணைப்பு வழங்கப்பட்டு மாகாணப் பாடசாலையில் அவருக்கான மாதாந்த வேதனம் வழங்கப்பட்டு வந்தது.

மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் கடமையாற்ற முடியாது என வடமாகாணக் கல்வி அமைச்சு கடந்த வருடம் அனுப்பிய சுற்று நிறுபத்திற்கு அமைய வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் நான்கு ஆசிரியர்கள் மாகாணப் பாடசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன் அடிப்படையில் மூன்று ஆசிரியர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் மட்டும் அந்த இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்தும் அதே பாடசாலையில் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் ஒழுக்கத்துக்கப் பொறுப்பானவர் என்னும் தோரணையில் 160ற்கும் மேற்பட்ட மாணவர்களின் சீருடையை மிகவும் அனாகரிகமான முறையிலும்இ பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலும் தாறுமாறாக வெட்டியுள்ளார். இதுதொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முறையிட்டபோதும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு செயலாளரின் புதல்வரின் சீருடையும் மிகமோசமாக வெட்டப்பட்டுள்ளது. இதன் பின்னரும் குறித்த ஆசிரியர் அதேபாடசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதும்இ அவருக்கான வேதனம் வழங்கப்படுவதற்கும் வலயக் கல்விப் பணிப்பாளரே முழுக்காரணமாகும். குறித்த ஆசிரியரால் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு தொழிற்படுகின்ற அதிபர்கள்இ ஆசிரியர்களுக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியவண்ணம் உள்ளனர்.

இதைவிட இத்தனை ஆசிரியர்களும்இ உதவி அதிபர்களும் உள்ள நிலையில் ஒரு ஆசிரியருக்காக வெளியில் உள்ள சிலர் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் விதத்தில் அவர்களைத் தூண்டி அந்தப்பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை சீரழிப்பதனை ஏற்க முடியாது.

அதேவேளை பாடசாலை வளாகத்திற்குள் வருகின்ற மாணவர்களை இதுபோன்ற செயற்பாடுகளுக்கு வெளியில் அழைப்பதற்கு அதிபரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளரின் சகோதரரான அதிபரும்இ வலயக் கல்விப் பணிப்பாளருமே இந்த விவகாரம் பூதாகாரமாவதற்கு காரணமானவர்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றுகின்ற பல கடமையுணர்வுள்ள ஆசிரியர்களின் பணிகளையும் கொச்சைப்படுத்துவதாகவும்இ அவர்கள்மேல் அபாண்டமான குற்றம் சுமத்துவதற்கு காரணமாக அமைகின்றது. ஆகையால் முதலில் வலயக் கல்விப் பணி்பாளர் மீதும் குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து நிற்கின்றது.

n10