வவுனியா நகரசபை மைதானத்தில் விசப்பாம்புகள் நடமாட்டம்: உடற்பயிற்சி செய்வோர் அச்சம்
வவுனியா நகரசபை மைதானத்தில் விசப் பாம்புகள் நடமாடுவதாக அங்கு காலை, மாலை வேளைகளில் உடற் பயிற்சி செய்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் காலை, மாலை வேளைகளில் பல் துறை சார் விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சிக் களமாக பயன்படுத்தி வருவதுடன், உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்போது மைதானத்தில் விசப்பாம்புகள் அவ்வப் போது வருவதாகவும், உடற்பயிற்சியில் ஈடுபட்ட சிலரின் சாப்பாத்து கால்களுக்குள் அவை அகப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்த ஒருவரை தீண்ட முற்பட்ட விசப்பாம்பு ஒன்று மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டது. இதேபோல் பலதடவை மைதானத்தில் பாம்புகளை கண்டதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
N5




