செய்திகள்

வவுனியா நகரில் பாறி விழுந்த மரங்களால் மயிரிழையில் தப்பிய மக்கள்

வவுனியா நகர பஸ் தரிப்பிட பகுதியில் இருந்த இரு மரங்கள் பாறி விழுந்த போது மக்கள் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றது.
வவுனியா, பஸ்நிலைய பகுதியில் உள்ள ஏ9 வீதிக்கு அண்மித்து கடைத்தொகுதிக்கு முன்னால் உள்ள இரு மரங்கள் இன்று அடியோறி பாறி விழுந்தன. இதன் போது வர்த்தக நிலையத்தின் பெயர் பலகை, தொலைபேசி இணைப்பு, ஏ9 வீதிப் போக்குவரத்து என்பன பாதிப்படைந்தன.
மரத்தின் அண்மையில் உள்ள மஞ்சள் கடவை மற்றும் வர்த்தக நிலையங்களுககு வந்தோர், மரத்தின் கீழ் இருந்து செருப்பு தைக்கும் தொழில் செய்வோர் எனப் பலரும் இந்த அனர்த்தத்தில் இருந்து மயிரிழையில் பாய்ந்து ஓடி உயிர்தப்பினர்.
Vavuniya Tree  (3)