வவுனியா பேயாடிகூழாங்குளம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவலம்
வவுனியா, பேயாடிகூழாங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் அவலநிலையில் வாழ்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.
வவுனியா, நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவுகுட்பட்ட பேயாடிகூழாங்குளம் பகுதி மக்களின் காணிகள் பல இராணுவ முகாமாக யுத்தகாலத்தில் இருந்தது. 2012 ஆம் ஆண்டு தமது காணிகளில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டது. தற்போது 39 வரையிலான குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்ற போதும் 25 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம், மலசலகூடம் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அருகில் புதிதாக உருவாக்கப்பட்ட கொக்கெலிய சிங்கள குடியேற்றம் சகல வசதிகளுடனும் எமது பகுதி நோக்கி அகலக்கால் வைத்து வருகிறது. ஆனால் எமக்கு தான் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நாம் காணிகள் இருந்தும் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
N5





