வாகன விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 வீதத்தால் குறைந்தது : 25,000 தண்டப்பணம் வேண்டும் என்கிறார் ராஜித
போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோர் மீதான தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த தண்டப்பண விதிப்பை எக்காரணத்திற்காகவும் நீக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தி கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சுகாதார அமைச்சு மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். -(3)




