செய்திகள்

வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

வெலிகம பகுதியில் இராணுவத்தினர் பயணித்த கார் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.