செய்திகள்

‘வாழ்வாதார உதவி எதுவும் கிடைக்கவில்லை’ ;உயிரை மாய்த்த முன்னாள் போராளி

வாழ்வாததர உதவி எதுவும் இன்றி வாழ்ந்துவந்த குடும்பஸ்தர் ஒருவர், வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்  நேற்று முன்தினம்  வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விநாயகர் லேன், வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சோதிலிங்கம் துசன் (வயது 36) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த இவர்,  யுத்தத்தின் பின்னர் 2012ஆம் ஆண்டு புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்திருந்தார்.
நான்கு வருடங்களாகியும் இவருக்கு வடக்கு மாகாணசபையாலோ அரசாலோ  எந்தவித வாழ்வாதார உதவியும்  கிடைத்திருக்கவில்லை.  இதனால் மனவிரக்தியடைந்த இவர், நேற்று  தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
2012 ஆண்டு வவுனியா பூந்தோட்டம் முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட  இவருக்கு திருமணமாகி  2 பிள்ளைகள் உண்டு.
விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தபோது சாரதியாக இருந்த இவர், முன்னாள் போராளி ஒருவரையே திருமணம் செய்துள்ளார்.
இவரைப் போன்றே முன்னாள் போராளிகள் பெருமளவானோர் பெரிதும் பாதிப்புற்ற நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
n10