செய்திகள்

விகாரைகளை அமைக்க வேண்டாமென இராணுவத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இராணுவத்தினர் வடக்கில் விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையெனவும் அவர்களுக்கு விகாரைகளை அமைக்க வேண்டாமென ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வடக்கில் விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் முகாம்களுக்குள் தமது சமய வழிபாடுகளுக்காக அங்கு புத்தர் சிலைகளை வைப்பதில் தவறில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)