செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக தென் மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தென் மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக கண்டிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று அந்த சபையில் உறுப்பினர் ஒருவர் அது தொடர்பான யோசனையை முன்வைத்த நிலையில் அதற்கு அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து அந்த யோசனையை நிறைவேற்றியுள்ளனர். -(3)