செய்திகள்
விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்களே ஜாதிக பெரமுன அமைப்பின் தலைவர் அகுலுகல்லே சிறி ஜனாநாந்த தேரரினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் அரசியலமைப்பை மீறி கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இதன்படி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் வலியுறுத்தியே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)




