விக்னேஸ்வரன் இனவாதியல்ல : மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
விக்னேஸ்வரன் இனவாதியல்லவென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ் ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போதே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் அவரை இனவாதியாக பார்க்கவில்லை. அவர் ஒரு அரசியல்வாதியே. வடக்கிலுள்ள மக்களுக்கு முதலமைச்சரோ அல்லது அரசாங்கமோ எதனையும் செய்யவில்லை. அதனால் மக்களுக்கு அந்த பிரச்சினைகளை மறக்கச் செய்ய அவர் இனவாதம் பேசுகிறார். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நீதித்துறையில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்யும் செயற்பாடுகளுக்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




