செய்திகள்

விசாரணையை மூடி மறைக்குமாறு பொலிஸாருக்கு எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை : சம்பிக்க

வாகன விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் காயமடைந்தமை தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்குமாறு தன்னால் பொலிஸாருக்கு எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கப்படவில்லையென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பயணித்துக்கொண்டிருந்த போது அதிலொன்று தனது அமைச்சின் வாகனமொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
இந்த விபத்துடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அத்துடன் இது தொடர்பான விசாரணைக்கு எந்த வகையிலும் நான் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. சில ஊடகங்கள் நான் விசாரணையை மூடி மறைக்குமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றன. அது பொய்யாகும். எவ்வாறாயினும் இது தொடர்பாக முறையான விசாரணையை நடத்துமாறு நான் பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதேவேளை இவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் தடை செய்யப்பட்டவை இவற்றுக்கு வீதியில் ஓட அனுமதிக்கக் கூடாது என பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன். என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
n10