செய்திகள்

விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மீளாய்வு செய்ய தயார் : முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதியளிப்பு

அபிவிருத்திகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலமானது மாகாண சபைகளின் அதிகாரத்தை பரிக்குமாகவிருந்தால் அந்த சட்டமூலத்தை திருத்தியமைக்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாகாண முதலமைச்சர்களிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பான தமது நிலைப்பாடுகளை முதலமைச்சர்கள் பிரதமருக்கு விளக்கிய நிலையில் குறித்த சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பரிக்கும் நோக்கத்தை கொண்டதல்லவெனவும் அபிவிருத்தியையே இலக்காக கொண்டதெனவும் இருப்பினும் அதில் சிக்கல்கள் இருப்பின் அதனை மீளாய்வு செய்ய தான் தயார் எனவும் பிரதமர் அதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று முதலமைச்சர்கள் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)