விஜயகலாவின் கருத்தை பிரதமர் ஏற்றுக்கொள்வரா? : வீரவன்ச கேள்வி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார் என்ற ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்வாரா என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதன்படி அவரின் கருத்தை ரணில் ஏற்றுக் கொள்வாரா?
அது ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தா? அல்லது வடக்கிற்கு ஒரு கருத்தையும் தெற்கில் இன்னொரு கருத்தையும் கொண்டிருப்பது தான் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். -(3)




