செய்திகள்

விஜய், சூர்யாவிற்கு எப்போது? பிரபல இயக்குனர் பேட்டி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், சூர்யா. இவர்களை எப்படியாவது ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்பது பலரின் கனவு.

இந்நிலையில் முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்து, அரிமா நம்பி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆனந்த் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் விரைவில் இருமுகன் படம் வெளிவரவுள்ளது, இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் துப்பாக்கி, 7ம் அறிவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினீர்கள், எப்போது விஜய், சூர்யா அவர்களை வைத்து படம் இயக்குவீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக, அதற்கான கதை ரெடியான அடுத்த நிமிடம் அவர்களை இயக்க நானும் தயார் ஆகிவிடுவேன்’ என கூறியுள்ளார்.

N5