செய்திகள்

விஜய் படத்திலும் ஒரு நெருப்புடா!

இளைய தளபதி விஜய் படம் வருகிறது என்றாலே திருவிழா தான். இவர் படங்களில் மிகப்பெரிய ப்ளஸ் பாடல்கள் தான்.

இந்நிலையில் அடுத்து இவர் நடித்து வரும் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் தான் இசை, இவர் ரஜினி நடித்த கபாலி படத்திற்கும் இசையமைத்து இருந்தது அனைவரும் அறிந்ததே.

இதில் நெருப்புடா பாடலின் ஹிட் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது விஜய் நடிக்கும் படத்திலும் நெருப்புடா சாயலில் ஒரு பாடல் உள்ளதாம்.

இந்த பாடலையும் அருண்ராஜ் காமராஜே எழுதி, பாடவுள்ளாராம், இவர் ஏற்கனவே தெறி படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.