விஜய் 62 படத்தை தனுஷ் எடுக்கிறாரா
விஜய் நடிப்பில் பைரவா படம் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய் 61 படத்தை அட்லீ இயக்குகிறார் என தகவல்கள் வந்தது.
அதுவும் உறுதியாகி இப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகப்போகிறது. வேலை நடந்து வரும் நிலையில் இப்போது புதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஏற்கனவே விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களில் எடுத்து இயக்குனர் முருகதாஸ் மீண்டும் அவரை வைத்து விஜய் 62 படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கி வரும் அவர் அட்லீ படத்தில் விஜய் நடித்து முடித்ததும் விஜய் வைத்து படம் எடுக்க போகிறாராம்.
இதை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது.
N5




