செய்திகள்

விடுதலைப்புலிகளின் முக்கியஸதர் தயா மாஸ்ரரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்த உதவிசெய்ததான குற்றச்சாட்டின் பேரில் தயா மாஸ்ரரை விளக்க மறியலில் வைக்க இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டார்.

ஐந்து இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் நான்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் தலா ஒரு இலட்சம் சரீரப் பிணையும் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இறுதிகக்ட்ட யுத்தத்தின் தயா மாஸ்ரரும் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்ரரும் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

அதனையடுத்து இருவர் மீதும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செயய்ப்ட்டு கடந்த 7 வருடங்களாக அது நடைபெற்று வந்தது. கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவரும் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகி வந்திருந்ததன் அடிப்படையிலேயே பிணை வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி பிணை வழங்கப்படும் பட்சத்தில் தயா மாஸ்ரர் வடமாகாணத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என நிபந்தனைகளுடன் உத்தரவிட்டார்.

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்களான திலக் மற்றும் இளம்பரிதியுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளின் செயல்ப்பாட்டிற்கு உதவி செய்தமை மற்றும் பொதுமக்களை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்ததுடன் அவர்களை கேடயமாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடுத்த வழக்கில் பிணையாளர்கள் நாளை ஒப்பமிடும் வரைக்கும் தயாநிதி என்ற தயா மாஸ்ரரை தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

N5