செய்திகள்

விடுதலைப்புலிகளிற்கு பின்னர் இலங்கை

மீனாக்சி கங்குலி- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் வடபகுதி நகரான மன்னாரை இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பகுதி முழுவதும் இராணுவமுகாம்களால் நிரம்பி காணப்படுகின்றது.அவர்கள் அங்கு சிறந்த முறையில் வாழத்தொடங்கிவிட்டதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது,வர்ணம் பூசப்பட்ட பூச்சாடிகளை காணமுடிகின்றது,வெயிலில் காயும் உடைகளை காணமுடிகின்றது.

இராணுவ முகாம்களிற்கு நடுவில் தென்னந்தோப்புகள் மற்றும் காடுகளிற்கு நடுவில் சிவப்பு நிற கூரைகளை கொண்ட அறைகள் போன்றவற்றை காணமுடிகின்றது.அவற்றிற்கு செல்வதற்கு பாதைகள் எதுவுமில்லை,புழதி, மண் மற்றும் சிறிய காய்கறிதோட்டங்கள் போன்றவற்றை காணமுடிகின்றது,இலங்கையில் இருபத்தாறு வருடங்களிற்கு மேல் நீடித்த உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களிற்கான இந்தியாவின் வீடமைப்பு திட்டங்களே இவை.
பல தமிழர்களை பொறுத்தவரை இந்த இராணுவ முகாம்களை அவர்கள் தங்கள் தோல்வியின் அடையாளமாகவே கருதுகின்றனர்: தமிழர்களிற்கு சொந்தமான நிலத்தில் முற்றுமுழுதாக சிங்களவர்களை கொண்ட இராணுவம் பரந்;துவிரிந்துள்ளது- இப்பகுதி ஓரு தசாப்தங்களிற்கும் மேலாக விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தது.யுத்தத்தின் இறுதி மாதங்கள் குறித்த கொடுரமான நினைவுகளும் காணப்படுகின்றன.
2008 இல் இலங்கை இராணுவம் இந்த பகுதி நோக்கி முன்னேறிய வேளை அது விடுதலைப்புலிகளை குறுகிய நிலப்பரப்பொன்றிற்குள் தள்ளியது.அரசபடையினர் கண்மூடித்தனமாகவும் தொடர்ச்சியாகவும் பெருமளவுமக்கள் காணப்பட்ட பகுதிகளை நோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர்.2009 இல்விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட பகுதி குறைவடைந்து வர அரசாங்கம் பாதுகாப்பு வலயம் என்பதை அறிவித்தது. அதில் பொதுமக்கள் தஞ்சமடையலாம் எனவும் தெரிவித்திருந்தது.எனினும் படையினர் இந்த பகுதி மீதும் தாக்குதலை மேற்கொண்டனர். விடுதலைப்புலிகள் இந்தப்பகுதிக்குள் ஊடுடுவியுள்ளதாலேயே தாக்குதலை மேற்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
mannarfamily(1)
பொதுமக்கள் உயிர்பிழைப்பதற்காக ஓடி கடற்கரையில் சிறிய பதுங்குழிகளிற்கு கீழ் தஞ்சம் புகுந்ததை நினைவுகூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் சிலர் சுயவிருப்பத்துடனும், சிலர் விருப்பமின்றியும் எண்ணிக்கையில் குறைவடைந்து வரும் விடுதலைப்புலிகளுடன் இலங்கையின் வடகிழக்கு கடலோரத்தில் உள்ள குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டனர்.விடுதலைப்புலிகள் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர்,தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிபிரயோகங்களையும் மேற்கொண்டனர்.
2008 ஆகஸ்ட் மாதம் அப்பகுதிகளிலிருந்து மனிதபிமான அமைப்புகளை வெளியேறுமாறு அரசாங்கம்  பிறப்பித்த உத்தரவு அந்த மக்களின் நிலையை மேலும் நெருக்கடியானதாக மாற்றியது.தொடரும் மோதல்கள், கண்காணிப்பதற்கு எவரும் இல்லாதது,நிவாரணப்உதவிகளை அரசபடையினரும் விடுதலைப்புலிகளும் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டமை போன்றவற்றால் மனிதாபிமான நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்தன,உணவு, குடிநீர், மருந்து போன்றவற்றிற்கு பாரிய தட்டுப்பாடு காணப்பட்டது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மோதலில் சிக்குண்டிருந்த சுமார் 300.000 மக்கள் வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டனர்,இராணுவம் அவர்களில் உள்ள விடுதலைப்புலிகளை அடையாம் காணும் முயற்சிகளை மேற்கொண்டது,போரில் ஈடுபடாதவர்களின் குடும்பத்தினர் மெல்ல மெல்ல தங்கள் கிராமங்களிற்கு திரும்ப தொடங்கினர், அவர்களில் பலர் தங்கள் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதையும் தங்கள் நிலங்கள் இராணுவமுகாம்களின் ஓரு பகுதியாக மாறியிருப்பதையும் கண்டனர்,இதன்காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்குமிடமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.சிலர் உறவினர்களுடன் தஞ்சமடைந்தனர்,ஏனையவர்கள் இந்தியாவின் 50000 குடிசைகளை பெற்றுக்கொள்ள முடிந்தது குறித்து நிம்மதியடைந்தனர்.
இலங்கையின் வசந்தம்
முதலில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டதாலும்,பின்னர் அரசபடையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டதாலும் பல வருடங்களாக செல்ல முடியாமலிருந்த இலங்கையின் வடபகுதிக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் சர்வதே மனித உரிமை கண்காணிப்பகம் விஜயம்மேற்கொண்டது,முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் எங்கும் காணப்பட்டன,வீதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன, பாலங்கள் மீள கட்டப்பட்டுள்ளன. வங்கிகள் அனைத்து பகுதிகளிலும் கிளைகளை ஏற்படுத்தியுள்ளன,வணிகவளாகங்களை காணமுடிகின்றது, சுற்றுலாப்பயணிகளிற்கான விடுதிகளும் உள்ளன.
நாங்கள் சந்தித்த பலர் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் காணப்படும் சிங்கள வெற்றிமனப்பான்மை குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்,நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதில் முன்னைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவும் அவரது அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் மாத்திரமல்ல முழு தமிழர்களும் என்ற மனோபாவத்துடன் செயற்பட்டனர்.இராணுவம் தமிழபகுதிகளில் பல சோதனைச்சாவடிகளை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. தமிழர்கள் கண்மூடித்தனமான சோதனை மற்றும் கைது குறித்த அச்சத்துடனேயே வாழந்தனர்,விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளைவான், பொதுமக்கள் வாகனங்கள் குறித்து அவர்கள் அச்சத்துடன் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் தடுப்பில் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நினைவுத்தூபிகள் தரைமட்டமாக்கப்பட்டன,நினைவுநிகழ்வுகள் தடைசெய்யப்பட்டன,அவர்கள் தங்கள் வீரத்தை கொண்டாடினர், ஆனால் எங்களால் எங்கள் உறவுகளை நினைவுகூறகூட முடியவில்லை என  இது மிகவும் வேதனையளிக்கும் விடயம் என பெண்மணியொருவர் தெரிவித்தார்.
ஆனால் ராஜபக்சவின் நடத்தைகள் தமிழர்கள் இல்லாதவர்களின் மத்தியில் அவரது செல்வாக்கினை அதிகரிக்கவில்லை. 26 வருட யுத்தத்தை முடித்துவைத்த மனிதராக அவர்அவர்களை ஆண்டிருக்கலாம் ஆனால் அவரது ஆட்சியின் அதிகரித்து வந்த ஏதேச்சாதிகாரப்போக்கு, ஊழல், குடும்ப ஆட்சி ஆகியவற்றின் காரணமாக அவர் 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
தற்போது ஜனாதிபதி சிறிசேன கடந்த காலங்களின் பல  மீறல்களிற்கு முடிவை கண்டுள்ளார்.சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம் முகாம்களிற்குள் முடக்கப்பட்டுள்ளது,அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் செயற்பாட்டாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்துவது குறைவடைந்துள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.தமிழர்கள் தற்போது யுத்தத்தில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூற அனுமதிக்கப்படுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த சிலரின் வழக்குகளை அரசாங்கம் ஆராய தொடங்கியுள்ளது.

கடந்த வருட இறுதியில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளை பிரதமரையும் ஏனைய அமைச்சர்களையும் சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்;பட்டது.அரச தொலைக்காட்சிகள் கூட அவர்களை செவ்விகண்டன,பல வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக மனித உரிமை கண்காணிப்பகத்தால் கொழும்பிலும் வடபகுதியிலும் தமிழர்களுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முடிந்தது,எங்கள் பயணங்களின் போதும் யாரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை, கேள்வி கேட்கவில்லை,தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதையும் நாங்கள் அலுவலகமொன்றில் பார்த்தோம், இது முன்னர் தடைசெய்யப்பட்டிருந்தது.

அனைவரிற்கும் நீதி

இந்த முன்னேற்றங்களிற்கு கீழ் இன்னமும் கவலை தரக்கூடிய சமிக்ஞைகளும் காணப்படுகின்றன,இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்தகுற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன என கருதப்படுகின்றது,ராஜபக்ச அரசாங்கம் இது குறித்து விசாரணைசெய்ய மறுத்து வந்ததுடன், பொதுமக்களிற்கு சிறிதளவு உயிரிழப்புகள் கூட ஏற்படவில்லை என தெரிவித்துவந்தது. சர்வதே மற்றும் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அது வர்ணித்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பொறுப்புகூறப்படவேண்டும் என்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இரு தீர்மானங்களை ராஜபக்ச அரசாங்கம் நிராகரித்தை தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கேட்டுக்கொள்ளப்பட்டது,2015 பிற்பகுதியில் அது பேரழிவு அறிக்கையை வெளியிட்டது,இது புதிய அரசாங்கத்திற்கு ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள தீhமானத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தங்களை கொடுத்தது,2015 ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் யுத்தகால துஸ்பிரயோகங்கள் குறித்து விசாரணைசெய்து வழக்கு தாக்கல் செய்வதற்காக நீதிபொறிமுறையை உருவாக்கும்படி கோரியது. இது அரசியல் மயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டிருந்தது.

எனினும் இதன் பின்னர் சிறிசேன அரசாங்கம் அதிலிருந்து பின்வாங்க தொடங்கியுள்ளது,ஜனவரி 21 ம் திகதி சிறிசேன தான் ஓருபோதும் சர்வதேசபிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ganguly_srilankaafterthetigers_boy

அவரது அறிக்கை ஐக்கிய நாடுகள்மனித உரிமை தீர்மானத்துடன் நேரடியாக முரண்படுவதாக காணப்படுகின்றது, இலங்கையும் அந்ததீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. தற்போதைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலக்கமடைந்துள்ளன,காணமற்போனவர்களின் குடும்பத்தினர் இன்னமும் அவர்களை தேடி வருகின்றனர்.  அதிகாரிகளிடம் மன்றாடுகின்றனர், ஆணைக்குழுக்கள் முன்னிலையில் தோன்றுகின்றனர்,நிலைமாற்றுக்கால நீதிக்கான கலந்தாய்வுகளிற்காக அரசாங்கம் நியமித்த செயலணி இன்னமும் முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களிற்கு அவசர உதவிகளும் ஆலொசனைகளும் தேவைப்படுகின்றன.  காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அவசியம், புனர்வாழ்வு அவசியம்,கால்கள், கண்கள் ,கைகள் அற்ற பலர் உள்ளனர் என செயற்பாட்டாளர் ஓருவர் தெரிவித்தார். பல ஆண்கள் காணமற்போயுள்ளதன் காரணமாகவும்,கொல்லப்பட்டுள்ளதாலும். யுத்த முடிவிற்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாலும் பல குடும்பங்களிற்கு பெண்களே தலைமை தாங்குகின்றனர், வீடமைப்பு திட்டங்களில் மீள குடியேற்றப்பட்டுள்ள அவர்கள் தங்கள் வாழ்வை கொண்டு நடத்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆனால் இந்த உடனடி தேவைகளை பூர்த்திசெய்வது மாத்திரம் போதுமானதல்ல,பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்கிறார் ஆனந்திசசிதரன். வடமாகாணசபை உறுப்பினரான இவர் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரான தனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணமற்போயுள்ளதாக குறிப்பிட்டார்.

பாரிய படுகொலைகளிற்கு காரணமாக அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கம் நினைவில்கொள்ளவேண்டும்,இராணுவம் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது,மக்கள் அச்சத்துடன் உள்ளனர்,நீதியே எங்களிற்கு வேண்டும், வாழ்வாதாரமே எங்களிற்கு வேண்டும் என்றார் அவர்.

யுத்தத்தினால் நொருங்கிப்போயுள்ள தேசத்தை சரிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.பழைய நம்பிக்கையீனங்களை பொறுப்புக்கூறல் வெற்றிபெற்றாலே அது சாத்தியமாகும்.