செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தலைதூக்கவே முடியாது: பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக கூறப்படுதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவ்வாறு தலைதூக்குமளவுக்கு அந்த இயக்கத்திற்கு சக்தியில்லையெனவும்  பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைதூக்கியுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர்களுக்கு மீண்டும் தலை தூக்க முடியாது. அந்தளவுக்கு அவர்களுக்கு சக்தியும் இல்லை. அதற்கு அரசாங்கமும் அதற்கு இடமளிக்காது. சிலர் அரசியல் தேவைகளுக்காக இவ்வாறான கதைகளை கூறிக்கொண்டு எமது நல்லிணக்க முயற்சிகளை குழப்ப முற்படுகின்றனர்.  என அவர் தெரிவித்துள்ளார்.

R-06