செய்திகள்

“விதுர விக்கரமநாயக்கவை பதவி நீக்க வேண்டும்”

தொல்பொருளுக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான பாதையில் நடத்தியவர் அத்தோடு தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை செயற்பட்ட மூல காரணமானவர். அமைச்சர் விதுர விக்கரம நாயக்கா. அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கவேண்டும். என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டத்தில் தொல்பொருள் பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருளுக்காக ஒதுக்கிய காணியை விடுவிப்பதற்கு தான் பின் வாங்கி அனுப்ப முடியாது. என தெரிவித்த போது ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை தருமாறு வாங்கியிருந்தார்.

எனவே இவை அனைத்துக்கும் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான பாதையில் நடாத்தியவரும் பணிப்பாளருக்கு ஆதரவாக செயற்பட்ட அமைச்சர் விதுர விக்கரம நாயக்கவை இந்த கூட்டத்துக்கு கேட்கும் கேள்வி, குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து விதுர விக்கரம நாயக்கதான் முக்கியமாக செயற்பட்டவர். அவ்வாறு மட்டக்களப்பில் குசனார் மலைக்கு வந்தபோது பாரிய எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தோம்.

எனவே ஜனாதிபதி ஏன் விக்கரம நாயக்கவை இது வரைக்கும் கண்டிக்கவில்லை உண்மையில் அமைச்சர் விக்கரம நாயக்கவை பதவில் இருந்து விலக்கவேண்டும்.

-(3)